Tuesday, 22 April 2014

பிரபுதேவா சம்பளம், ரூ.30 கோடி!

இந்திய திரையுலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் டைரக்டர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார், பிரபுதேவா. இவர், ஒரு இந்தி படத்துக்கு வாங்கும் சம்பளம், ரூ.30 கோடி!
இரண்டாவதாக அதிக சம்பளம் வாங்கும் டைரக்டர், ஷங்கர். இவர் ஒரு படத்துக்கு ரூ.18 கோடி வாங்குகிறார். அதிக சம்பளம் வாங்கும் டைரக்டர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், ஏ.ஆர்.முருகதாஸ். இவர் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி வாங்குகிறார்!

டைரக்டர் விஜய்–நடிகை அமலாபாலுக்கு ஜூன் 7–ந் தேதி, நிச்சயதார்த்தம் கேரளாவில் நடக்கிறது

டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் ஆகிய இருவருக்கும் வருகிற ஜூன் 7–ந் தேதி, கேரளாவில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இவர்கள் திருமணம் சென்னையில், ஜூன் 12–ந் தேதி நடக்கிறது.
விஜய்–அமலாபால்
அஜீத் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘கிரீடம்’ படத்தை தொடர்ந்து, ‘பொய் சொல்லப்போறோம்,’ ‘மதராச பட்டினம்,’ ‘தெய்வத்திருமகள்,’ ‘தாண்டவம்,’ ‘தலைவா’ ஆகிய படங்களை விஜய் டைரக்டு செய்திருக்கிறார். இவர் டைரக்டு செய்த ‘சைவம்’ என்ற புதிய படம், மே 9–ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
அமலாபால், ‘விகடகவி,’ ‘சிந்து சமவெளி,’ ‘மைனா,’ ‘வேட்டை,’ ‘காதலில் சொதப்புவது எப்படி,’ ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்,’ ‘நிமிர்ந்து நில்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் டைரக்ஷனில், ‘தெய்வ திருமகள்,’ ‘தலைவா’ ஆகிய 2 படங்களிலும் அவர் நடித்தார்.
காதல் திருமணம்
அப்போது, டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் ஆகிய இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலை இருவருமே முதலில் மறுத்து வந்தார்கள். விஜய் டைரக்டு செய்த ‘சைவம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அமலாபால் வந்திருந்தார். விழாவில் அவர் பேசும்போது, ‘‘இது, என் குடும்ப விழா’’ என்று குறிப்பிட்டார்.டைரக்டர் விஜய்–அமலாபால் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முன்வந்தார்கள். அதைத் தொடர்ந்து டைரக்டர் விஜய்–அமலாபால் திருமணம் வருகிற ஜூன் மாதம் 12–ந் தேதி, சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது. அன்று மாலை 6–30 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
நிச்சயதார்த்தம்
முன்னதாக, டைரக்டர் விஜய்–அமலாபால் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, ஜூன் 7–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் நடக்கிறது.நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், இரண்டு பேரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள்.

Tuesday, 15 April 2014

எம்.ஜி.ஆர் இடத்தில் விஜய்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் 1965 ம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டது.
இப் படத்தின் ரீமேக் பல நடிகர்கள் முயன்று கிடைக்காமல் கடைசியாக விஜய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது .
இப் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் செல்வபாரதி   திட்டமிட்டு இருக்கிறார்.மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பரான  இயக்குநர் செல்வபாரதி. 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே', 'வசீகரா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
ஆனால் தற்போது விஜய் கத்தி படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார் இதுக்கு  அடுத்த பட வாய்ப்பை இயக்குனர் சிம்புதேவன் க்கு கொடுத்து இருக்கிறார் . 
இப் படத்தை முடித்த பிறகு இதில் நடிப்பர் என்று எதிர் பார்க்க படுகிறது. இதனிடைய  விஜய்யின்  வேட்டைக்காரன் தலைப்பை உபயோக படுத்தியதற்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கோபம் கொண்டனர். 
எனவே இதை இம் முறையும் தலைப்பு  ஏற்று கொள்வார்களா, இதில் விஜய் நடிப்பார  என பொறுத்து இருந்து தான் பாக்க வேண்டும் .

Un Samayalaraiyil Movie Poster


'RA' Official poster..


surya n lingusamy


Aaralai sennai's trailer...


naanthan bala trailer...


damaal dumeel trailer


arima nambi trailer...


கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்தது சில காட்சிகளில் மட்டுமே…!

கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு, மே 9 ஆம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில்…கோச்சடையான் பற்றிய ரகசிய செய்தி ஒன்று நம் காதுக்கு வந்தது.....அதாவது நடிப்பு பதிவாக்கம் என்கிற மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது. அவதார் படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் ஆசியாவிலேயே முதன்முறையாக கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது......உடல்நிலை சரியில்லாமல் சங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத்திரும்பிய பிறகு ரஜினியினால் டான்ஸ் ஆடுவது, ஃபைட் பண்ணுவது போன்ற கடினமான பணிகளை செய்ய முடியாது.......எனவேதான் நடிப்பு பதிவாக்கம் மூலம் அவருக்கு கஷ்டம் கொடுக்காமல் கோச்சடையான படத்தை எடுத்திருக்கிறார் அவரது மகள் சௌந்தர்யா......கோச்சடையான் படத்தில் ஆரம்பத்தில் சில நாட்கள் உற்சாகமாக நடித்த ரஜினியால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய் ரொம்பவே சிரமப்பட்டாராம். எனவே ரஜினிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவர் நடிக்க வேண்டிய 90 சதவிகித காட்சிகளை டூப்பை வைத்தே எடுத்திருக்கின்றனர்........விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சியில் நடனம் ஆடும் யுவராஜ் என்ற டான்ஸரும், மற்றொரு சிரிப்பு நடிகரும்தான் ரஜினிக்கு டூப் போட்டு நடித்துள்ளனர்.....இதில் முக்கியமாக விஷயம்…கோச்சடையான் படத்தின் நாயகியான தீபிகா உடன் ஒரு ஷாட்டில் கூட ரஜினி நடிக்கவில்லை. டூப்தான் நடித்துள்ளனர்.

மாமனிதராக தெரிகிறார் அஜீத்!!! -கெளதம்மேனன் உருக்கம்

எது எது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும் என்பதற்கேற்ப, எப்போதோ இணையவிருந்த அஜீத்-கெளதம்மேனன் இருவரும் இப்போதுதான் இணைந்திருக்கிறார்கள்.....அதுவும், தங்களுக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இப்போது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாக களத்தில் உள்ளனர்...மேலும், சமீபகால வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என் மனநிலையில் அஜீத்தும், கடந்தகால தோல்வியில் இருந்து இந்த படம் மூலம் மீண்டு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் கெளதம்மேனனும் ஒரு பாசிட்டீவ் எனர்ஜியுடன் படப்பிடிப்பு தளத்தில் உள்ளனர்......ஒவ்வொரு ஷாட் முடிந்ததும், இருவரும் தனித்து அந்த காட்சியைப்பற்றி விவாதிப்பது. திருப்தி இல்லை என்றால் இன்னொரு ஷாட் எடுத்துக்கொள்வதுமாக ஒருமித்த கருத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.....இந்த நிலையில், நடிகர், டைரக்டர் என்ற பாகுபாடில்லாமல் தனது குடும்ப உறுப்பினரைப்போலவே அஜீத் என்னுடன் பழகுகிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற வேறுபாடு பார்க்காமல் அவர் அனைவரிடமும் ஒரேவிதமாக பழகுவது ஆச்சர்யமாக உள்ளது.......அதைப்பார்க்கையில் அஜீத் என் கண்களுக்கு ஒரு மாமனிதராக தெரிகிறார் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் கெளதம்மேனன்.

Aaralai sennai on location...





aaralai sennai's hero FRANKLIN


Raffel john raj.... :)


ES Co-director,producer,dialogue writer RAJKUMAR....


Aaralai sennai's hero ABISHEK


ES music director SAM JOSEPH....


our shortfilm 'Aaralai sennai' youtube link..

emerald studios first shortfilm poster..


our facebook page....