எது எது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும் என்பதற்கேற்ப, எப்போதோ இணையவிருந்த அஜீத்-கெளதம்மேனன் இருவரும் இப்போதுதான் இணைந்திருக்கிறார்கள்.....அதுவும், தங்களுக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இப்போது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாக களத்தில் உள்ளனர்...மேலும், சமீபகால வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என் மனநிலையில் அஜீத்தும், கடந்தகால தோல்வியில் இருந்து இந்த படம் மூலம் மீண்டு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் கெளதம்மேனனும் ஒரு பாசிட்டீவ் எனர்ஜியுடன் படப்பிடிப்பு தளத்தில் உள்ளனர்......ஒவ்வொரு ஷாட் முடிந்ததும், இருவரும் தனித்து அந்த காட்சியைப்பற்றி விவாதிப்பது. திருப்தி இல்லை என்றால் இன்னொரு ஷாட் எடுத்துக்கொள்வதுமாக ஒருமித்த கருத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.....இந்த நிலையில், நடிகர், டைரக்டர் என்ற பாகுபாடில்லாமல் தனது குடும்ப உறுப்பினரைப்போலவே அஜீத் என்னுடன் பழகுகிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற வேறுபாடு பார்க்காமல் அவர் அனைவரிடமும் ஒரேவிதமாக பழகுவது ஆச்சர்யமாக உள்ளது.......அதைப்பார்க்கையில் அஜீத் என் கண்களுக்கு ஒரு மாமனிதராக தெரிகிறார் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் கெளதம்மேனன்.
No comments:
Post a Comment